புதிய டொயோட்டா கார்கள் வாங்க,சர்வீஸ் செய்ய மற்றும் கார் டீடெய்லிங் என அனைத்து வசதிகளும் ஒரே கூரையின் கீழ் கொண்ட பிரம்மாண்ட கிரிஷ் டொயோட்டா தனது ஷோரூமை கோவை திருச்சி சாலையில் துவங்கியது

சென்னைக்கு அடுத்த படியாக வேகமாக வளரந்து வரும் நகரமாக கோவை மாறி வரும் நிலையில் டொயோட்டா கார் தொடர்பான அனைத்து வசதிகளும் கொண்ட புதிய கிரிஷ் டொயோட்டா கோவை திருச்சி சாலையில் துவங்கப்பட்டது..

ஒரு ஏக்கர் பரப்பளவில் கரூரை சேர்ந்த கே.ஆர்.குழுமம் சார்பாக துவங்கப்பட்டுள்ள இதற்கான துவக்க விழா கே.ஆர்.குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் அவரது தாயார் லட்சுமி அம்மாள் புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கே.ஆர்.குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ணன்,
கிரிஷ் டொயோட்டாவின் நிர்வாக இயக்குனர் வசுதா ராமகிருஷ்ணன் மற்றும் தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் ஆகியோர் பேசினர்..

ஏற்கனவே கோவையில் டொயோட்டா ஷோரூம்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் நலன் கருதி டொயோட்டா எங்கள் நிறுவனத்திற்கும் வாய்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்..

ஷோரூமின் நிர்வாக இயக்குனர் இளம் பெண் தொழில் முனைவோரான வசுதா கூறுகையில்,
இங்கு டொயோட்டா ஆரம்ப மாடல் துவங்கி உயர் ரக சொகுசு வகை கார்கள் வரை விற்பனை செய்ய இருப்பதாகவும் குறிப்பாக கார் டீடெய்லிங்,நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட சர்வீஸ் மையம் என அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்..

பல்வேறு துறைகளில் எங்களது கே.ஆர்.குழுமம் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த தலைமுறை பயணமாக வாகனம் தொடர்பான துறையை தேர்வு செய்துள்ளதாக கூறிய அவர்,அடுத்தடுத்து புதிய ஷோரூம்களை துவங்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *