கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே
திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை ஶ்ரீ முல்லைவனநாதர் திருக்கோவில் நவராத்திரி தெப்பத் திருவிழா…
திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பிரசித்திபெற்ற திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில்,நவராத்திரி தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மலர் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கர்ப்பரட்சாம்பிகை உடனுறை ஶ்ரீ முல்லைவனநாதர் சிறப்பு பூஜைகளும் தெப்பத்திற்கு எழுந்தருளி, தெப்பத்தில் தீர்த்த குளத்தில் சுற்றி வந்து வானவேடிக்கையுடன் நாதஸ்வர வாத்தியம் ,வீணை ,நாதகாணம் இசையுடன் பக்தர்களுக்கு அருள்பாளித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது .
விழாவி்ல் திருக்கருக்காவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.