பெரம்பலூர் சங்குபேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் நகரம் சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலில் சரஸ்வதி பூஜையையொட்டி அம்மனுக்கு, பால், தயிர்,பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும், சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை இந்து அறநிலைய துறை அறங்காவலர் கண்ணபிரான், மற்றும் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியை இந்து அறநிலையத் துறை அறங்காவலர் கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூசாரி வெ.நீதிதேவன் ஆகியோர் செய்தனர். உடன் சக்கரவர்த்தி, கனகராஜ், சுரேஷ், ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *