ராஜாக்கள்பட்டி அருகே கேஜிபி குளோபல் நகரில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விழா
மதுரை மாவட்டம் ராஜாக்கள்பட்டி அருகே செம்பட்டி கரடு கே.ஜி.பி. குளோபல் நகரில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள அனைத்து விவசாய வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் அலுவலக வாகனங்கள் நிறுத்தப்பட்டு சிறிய வாழை மரம் கட்டப்பட்டு வண்ண மலர்கள் அணிவித்து சந்தனம். குங்குமம், உள்ளிட்டவைகள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.
இதில் மறவபட்டியை சேர்ந்த சினிமா நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும், சென்னை தொழிலதிபருமான கே.ஜி.பாண்டியன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பூஜையில் கலந்து கொண்டனர்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமி படத்தின் முன்பாக சர்க்கரைப் பொங்கல், மற்றும் பொரிகடலை, கொய்யாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, உள்ளிட்டவைகள் படைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே.ஜி. பாண்டியன், மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.