தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகள் மீதான போரை நிறுத்த வேண்டும். அக்டோபர் 15,16 தேதிகளில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா தீர்மானம் முன்மொழிய வலியுறுத்தி பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இரா.அருணாச்சலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் துவக்கி வைத்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், தமிழ்தேச மக்கள் முன்னணி மாநகர செயலாளர் எம்.ஆலம்கான் தாளாண்மை உழவர் இயக்கத்தின் நிறுவனர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.குருசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னதாக யூதர்கள் நாடு இல்லாமல், இடம் இல்லாமல் அலைந்து திரிந்த போது பாலஸ்தீனம் ஆதரவு தந்ததன் அடிப்படையில் இஸ்ரேல் நாடு உருவானது. பின்னர் வல்லரசாக உருமாறி ஆதரவு தந்த பாலஸ்தீனத்தை அபகரிக்க தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற யாசர் அராபத் பாலஸ்தீன விடுதலைக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்து போராடினார் . தொடர்ந்து பாலஸ்தீனத்தின் இறையாண்மைக்காக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனம் காசா நகரத்தின் மீது கொடூரமான போரை சர்வதேச போர் விதிமுறைகளையும் மீறி, தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், குண்டுகளையும் வீசி கொன்று குவித்து வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த லெபனான், சிரியா, ஏமன், ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் வல்லரசு அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொடூரமான போரை தொடுத்துள்ளது. இந்தியா ஆயுதங்களையும், தொழிலாளர்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பக்கூடாது, தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட ஆர்ப்பாட்டத்தை இந்திய, பாலஸ்தீன நட்புறவுக் கழகத்தின் மாநில தலைவர் கசி.விடுதலைக்குமரன் முடித்து வைத்தார்.