மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். அப்துல் கலாம் உருவப்படத்திற்கு பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்துல் கலாம் பற்றிய பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலாம் பிறந்த நாளை முன்னிட்டு எல்.கே.பி நகர் ஊரில் தெருக்களில் மரக்கன்றுகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கைகளால் நடப்பட்டன.
அப்துல்கலாம் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.