விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எல்ஐசி கிளை முன்பு எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்ஐசி முகவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் செயலாளர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி முகவர்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும், எல்ஐசி முகவர்களுக்கான கமிஷனை உயர்த்தவும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் பொருளாளர் சதாசிவ ராஜா நன்றி கூறினார்.