தேனி அருகே உள்ள வடதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் மிக சிறந்த கல்வி நிறுவனம் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் மறைந்த மாமேதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும நிறுவனங்களின் தலைவருமான கல்வி தந்தை டி ராஜமோகன் தலைமை வகித்து கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் எம் எம் ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த அறிவியல் கண்காட்சியில் ஆட்சி மன்ற க்குழு உறுப்பினர்கள் பள்ளிச் செயலாளர் டி . கண்ணன் மற்றும் இணைச் செயலாளர்கள் ஓ.கே .டி. விஜய் ஏ.பி கார்த்திகேயன் மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண் கவர் கண்காட்சியை அனைத்து உறவின் முறை கல்வி நிறுவனங்களின் இருபால் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் கண்டுகளித்தனர் இந்த கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளி முதல்வர் சாம்பவி கார்த்திக் வெகு சிறப்பாக செய்திருந்தார்