வத்தலகுண்டு அருகே கொட்டும் மழையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தருமத்துப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீகோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழாவில், கோட்டை கருப்பண்ணசாமி வேட்டைக்குச் சென்று ஆகாய பூஜை கொடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது. கோவில் பாரம்பரிய வழக்கப்படி பச்சரிசி அன்னம் சமைக்கப்பட்டு திருப்பதி லட்டு போல் கைகளால் உருண்டையாக உருட்டப்பட்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டு கறி விருந்து பரிமாறப்பட்டது.
அப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பொழிந்து கொண்டிருந்தது இதனையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விடிய விடிய நடந்தது.