எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை.
வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காத்தழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15 மற்றும் 16 ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மிதமான முதல் கனமழை பரவலாக பெய்தது,தற்போது மழைபெய்யாத நிலையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
கடல் சீற்றத்தின் காரணமாக மாவட்டத்திலுள்ள பூம்புகார் தரங்கம்பாடி திருமுல்லைவாசல் பழையார் உள்ளிட்ட 28 கிராம மீனவர்கள் 300க்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தொடர் மழை மற்றும் புயலால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை பாதுகாக்க அரக்கோணத்திலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி வந்துள்ளனர்.
இவர்கள் பாதுகாப்பு உபகரணங்களான ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர்மூழ்கி பம்புகள் உள்ளிட்ட 60 வகையான உபகரணங்களுடன் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
இவர்கள் மாவட்டத்தில் பதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு இங்கிருந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.