தேனியில் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி டாஸ்மாக் சுமை தூக்கும் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்ட தலைநகரான தேனியில் மாவட்ட டாஸ்மாக் குடோனில் மதுபாடில்களை ஏற்றி இறக்கும் சுமை தூக்கும் பணியாளர்கள் தேனி டாஸ்மாக் குடோன் முன்பு இந்த மாதத்தில் நடைபெற உள்ள தமிழர்களின் சிறப்பு பண்டிகையான தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாட தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு சார்பில் அதன் மாவட்ட தலைவர் காளிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.