இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து திருவாரூர் இந்தியன் ரெட் சொசைட்டியில் சர்வதேச பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தினம் நடைபெற்றது. விழிப்புணர்வு தின நிகழ்விற்கு நேரு யுவேந்தரா திட்ட அலுவலர் ஆர். பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
விழாவிற்கு திருவாரூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஆர். எஸ். ராஜ்குமார் தலைமை வகித்தார். திருநீலகண்டன் மாவட்ட இளைஞர் அலுவலர்முன்னிலை வகித்தார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கௌரவ செயலாளர் ஜே. வரதராஜன் மற்றும் ஏ. வி. பாலு பொருளாளர் கருத்துரை வழங்கினார் திருவாரூர் மாவட்ட தீயணைப்பு தடுப்பு துறை அலுவலர் எஸ். கார்த்திகேயன் மற்றும் ஆர்.வீரமணி சிறப்பு நிலைய அலுவலர் மாணவ மாணவிகளுக்கு பேரிடர் பற்றிய விழிப்புணர்வு செய்முறை விளக்க பயிற்சி வழங்கினார்
கே. ஏழுமலை திட்ட அலுவலர் இந்திய செஞ்சிலுவை சங்கம் சுவாமி தயானந்தா கல்லூரி மஞ்சகுடி கே தீபன் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் கே வி கண்ணன் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி முத்துப்பேட்டை பேரிடர் மேலாண்மை முதலுதவி பயிற்சியை வழங்கினார் இறுதியாக கே. விஜய் நன்றி கூறினார். பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது