போடிநாயக்கனூர் சி.பி.ஏ என்ற ஏல விவசாயிகள் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் தமிழகம் கேரளாவை இணைக்கும் முந்தல் சாலையில் அமைந்துள்ள போடி சி.பி.ஏ. என்ற ஏல விவசாயிகள் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 19. 10 .2024. சனிக்கிழமை மாவட்ட நிர்வாகம் மற்றும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தனியார் துறை வேலைவாய்ப்பு தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்
இந்த முகாமில் கலந்து கொள்ள கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை மற்றும் பிஇ டிப்ளமோ ஐடிஐ மற்றும் இதர கல்வி தகுதிகளுடைய அனைவரும் பங்கேற்கலாம் முகாமில் பங்கேற்க எவ்வித கட்டணமும் இல்லை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
முகாமில் பங்கேற்க விரும்பும் வேலையில்லாத பட்டதாரிகள் மற்றும் இளம் பெண்கள் http //www.tnprivatejobs.tn.gov.in/ என்ற லிங்க் மூலம் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து முன்பதிவு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.