கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் கௌசிகா நதியை புதுப்பிக்க முடிவு செய்து. இதற்கான அளவீட்டு பணியை ரோட்டரி மாவட்டம் 3201 உடன் கௌசிகா நீர் கரங்கள் இணைந்து துவக்கியுள்ளது.
பணி துவக்க விழா வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் விழா நடந்தது. இதை ரோட்டரி கிளப் 3201 கவர்னர் சுந்தரவடிவேலு பணியைத் துவக்கி வைத்தார்.
இது குறித்து ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு கூறும்போது :- உலக அளவில் போலியோ ஒழிப்பில் முன்னோடியாக திகளும் ரோட்டரி அமைப்பு. பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.
கௌசிகா நீர்க்கரங்கள் அமைப்புடன் இணைந்து கௌசிகா நதியை புதுப்பிக்கும் பணியை கோவை வையம்பாளையத்தில் துவக்குகிறது. கோவை மாவட்டத்தின்
நதியாக திகழ்ந்த கௌசிகா நதி, 52 கி.மீ., நீளம் கொண்டது. குருடி மலையிலிருந்து உற்பத்தியாகி, நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையில், நதியாக மாறுகிறது. வண்ணாற்றங்களை ஆறு என அழைக்கப்படும் இதன் கரைகளில் 3 வரலாற்று கால கோயில்களும் உண்டு. கொங்குநாட்டு வம்சத்தினரான கொங்கு சோழர்கள் கற்றாளியாக மாற்றி அமைத்தனர்.