கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே அருகே கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் முன்னோர்களால் நிறுவப்பட்டிருந்த போகசக்தி பஞ்சலோக தெய்வ திருமணி ஐம்பொன் சாமி சிலையை ஒன்பது கோடி ரூபாய்க்கு நியூயார்க் தொல்பொருள் ஏலக்கூடத்தில் ஏலம் விடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தின் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் மச்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் அமைந்துள்ள சாமிகளை வழிபடுவதற்காக தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வருகை புரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களும் பேசும்போது,
இந்த கோயிலில் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி, பல்வேறு ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் 1974-ஆம் ஆண்டு போகசக்தி பஞ்சலோக தெய்வதிருமணி அம்மன் சிலை வழிபாட்டில் இருந்து வந்ததாகவும், அதை அமெரிக்கா நியூயார்க்கில் அமைந்துள்ள சோதெபி தொல்பொருள் ஏலக்கூடத்தில் ஒன்பது கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட உள்ளதாகவும், அதை தமிழக அரசு மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து ஏலத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி, போகசக்தி அம்மனை மீட்டெடுத்து மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் வழிபாடு செய்ய வேண்டும் எனவும், இது சம்பந்தமாக சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈமெயில் அனுப்பப்படும் எனவும், தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இதுபோன்று காணாமல் போன சாமி சிலைகளை மீட்பதற்கு சட்ட ரீதியான முயற்சியை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். அவருடன் கோயில்தேவராயன்பேட்டையை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும். ஆன்மீக பக்தர்களும் உடன் இருந்தனர்.