ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), பெரியகுளம் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ஜீவநதி தொண்டு நிறுவனம் பெங்களூர் வழியாக, புனித அன்னாள் சமுதாயக் கூடம் தாமரைக்குளத்தில் வைத்து, தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும், டி.கள்ளிப்பட்டியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் கம்பளி போர்வைகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.
டி.கள்ளிப்பட்டி கிராமத்திலுள்ள ஏழை கைம்பெண் தேவி அவர்களுக்குப் பெட்டிக்கடை நடத்துவதர்க்கு உதவியும் படிக்கும் கல்லூரி மாணவி ரிஸ்வானா பர்வீன்க்குக் கல்வி கட்டணம் செலுத்தவும் நிதியுதவி வழங்கப்பட்டன. மேலும், இலவசமாக மாணவர்களுக்கான ஆடைகளை பெறப்பட்ட பள்ளி டி.கள்ளிப்பட்டி, தாமரைக்குளம் பகுதியிலுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இவ்வாறு இப்பகுதி ஏழை எளிய மக்களின் பயன் பாட்டிற்காக ஜீவநதி தொண்டு நிறுவனம் வழியாக சுமார் 500 கம்பளி போர்வைகள் மற்றும் சேலைகள், பள்ளி மாணவர்களுக்கான ஆடைகள் என்று ஐந்து இலட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்த்து ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியோடு ஜீவநதி தொண்டு நிறுவனம் இணைந்து பணிகளைச் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக நல ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர்.எஸ். யேசுராணி, கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் ஆர்.சாந்தா மேரி ஜோசிட்டா, கல்லூரியின் இல்லத்தலைமை அருட்சகோதரி, முனைவர் பாத்திமா மேரி சில்வியா, தாமரைக்குளம் பஞ்சாயத்துத் தலைவர் பால்பாண்டி, டி.கள்ளிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் நாகராஜ் கலந்து கொண்டு சிறம்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஜீவநதி தொண்டு நிறுவனத்தின் நிறுவுனர் சகோதரர் அகஸ்டின் மற்றும் அதன் உறுப்பினர்களான சீமா பர்னான்டீஸ். ரோசி, ரோகினி சுனிதா,ஜான் அனிடிக் ஹரி மற்றும் ரென்னி தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் போர்வைகள், சேலைகள் வழங்கி ஏழை எளிய மக்களை மகிழ்வித்தனர்.
இந்நிகழ்வில் நாட்டுநலப் பணித்திட்டப் பேராசிரியர்களும் 200 மாணவிகளும் கலந்து
கொண்டனர்.