தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் :

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை :

இந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது.

தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாக நடப்பு அக்டோபர் மாதம் சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும்.துணிமணி, பட்டாசு, பலகாரங்கள் வாங்க முன்கூட்டியே சம்பளம் வழங்கினால் அது எங்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

கடந்த செப்டம்பர் மாதம் சம்பளம் மத்திய அரசின் பங்களிப்பு தாமதமான போதும்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 32,500 பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் பெருமனதுடன்

மாநில அரசு நிதியில் இருந்து வழங்கி உதவியதைப்போல்,

இதையும் இந்த நேரத்தில் செய்ய வேண்டும்: மேலும் பண்டிகை முன்பணம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க ஆணையிட வேண்டும்.முன்பணம் கடனாக வழங்கி அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்: 13 ஆண்டுகளாக தற்போது ரூபாய் 12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பன்னிரண்டாயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்

வாழ்வாதாரம் மேம்பட, திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ அரசாணையாக்கி,பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து, தீபாவளி பரிசாக அறிவிக்க வேண்டும் :

என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

S.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

செல் : 9487257203

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *