கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ‘காலத்தை வென்ற கண்ணதாசன்’ உரையரங்கம்

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ‘காலத்தை வென்ற கண்ணதாசன்’ என்ற தலைப்பில் கண்ணதாசனின் நினைவு தின சிறப்பு உரையரங்கம் ஆசியன் இன்சிடியூட் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் முகமது அப்துல்லா, எ.தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு தொல்காப்பியர் தமிழ்ச் சங்க செயலாளர் புலவர் மெய். பூங்கோதை பங்கேற்று, காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான் என்று பல்வேறு திரைப் பாடல்களை பாடி விளக்கம் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் வந்தை பிரேம், ஜா.தமீம், ஸ்ரீமாந்த், க. வாசு, இரா. அருள் ஜோதி, கு. சதானந்தன், ஆகியோர் கவிதை மற்றும் வாழ்த்துரைகளை வழங்கினர். முன்னதாக செயற்குழு உறுப்பினர் இரா. அருண்குமார், தென்னாங்கூர் ரஜினி ஆகியோர் தமிழிசைப் பாடல்களை பாடினர். நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், மாணவ மாணவிகள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் தமிழ்ச் சங்க நிர்வாகி அ.ரஷீத் கான் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.