தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது..
மேம்பாலங்கள்,சாலை வசதிகள்,உட்கட்டமைப்புகள் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்..
அதன் படி மக்கள் கூடும் இடங்களில் ஸ்மார்ட் சிக்னல்கள் பொருத்தப்பட்டு வருகின்றன..
இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச்.மருத்துவமனை அருகே மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் சிக்னலை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் செயல் இயக்குனர் அருண் பழனிசாமி உடனிருந்தார்..
இந்த ஸ்மார்ட் சிக்னல் மூலம் திருப்பூர்,ஈரோடு,சேலம்,போன்ற உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து பேருந்தில் வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்க முடியும்..
சாலை விபத்தைத் தடுக்கும் நோக்கிலும், பாதசாரிகளுக்கு உதவும் வகையிலும் இந்த ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,சரியான இடங களில் பொதுமக்கள் சாலையை கடக்க வேண்டும் எனவும், தானியங்கி முறையில் இயங்கும் இந்த பெலிக்கான் சிக்னலை கூட்டம் அதிகமாக இருந்தால் பொதுமக்களும் உபயோகிக்கலாம் என்றும் கூறினார்.