ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மகாத்மா காந்திஜி சிலையை சாலை விரிவாக்கத்திற்காக நகர்த்தி வைப்பது சம்பந்தமாக அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஆய்வு.!
ஈரோடு மாநகரில் உள்ள கருங்கல்பாளையம் மகாத்மா காந்திஜி சிலையை சாலை விரிவாக்கம் செய்திட நகர்த்தி வைத்தல் சம்பந்தமாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற மேம்பாட்டு வாரியம் அமைச்சரும் ஈரோட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வரலாற்று நாயகர் சு. முத்துசாமி அவர்கள்,ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்
இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர செயலாளர் ம.சுப்பிரமணியம்,துணை மேயர் வி.செல்வராஜ், தெற்கு திமுக மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார்,கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் குறிஞ்சி என் தண்டபாணி,கோட்டை பகுதி செயலாளர் பொ.ராமசந்திரன், திமுகவின் மாமன்ற உறுப்பினர்களான ரமேஷ் குமார், கீதாஞ்சலி செந்தில் குமார்,தீபலட்சுமி அண்ணாதுரை,காந்திஜி சிலை பராமரிப்பாளர் சந்திரசேகர் & நிர்வாகிகள் மற்றும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவர் எஸ் முகமது யூசுப், சேவாதள மாவட்ட துணைத் தலைவர் ராஜாஜிபுரம் பி.குமரேசன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.