விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் ஏ கே டி தர்மராஜா ஆரம்பப் பள்ளியில் ஏ.கே.டி. தர்மராஜா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளி அறக்கட்டளை சார்பில் ஏ.கே.டி. ரமணிதேவி முகாமை துவக்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை கே. தனலட்சுமி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களை பள்ளிக்குழு உறுப்பினர் டி. சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். சிறப்பு விருந்தினரை பள்ளிக் குழு உறுப்பினர் ராம்குமார் கௌரவப்படுத்தினார்.
மருத்துவ முகாமில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ். குமரேசன் 136 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து பரிந்துரைகள் வழங்கினார்.
பள்ளிக் குழு உறுப்பினர் பேராசிரியர் முத்துகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் பள்ளிக் குழு உறுப்பினர் எம். ஆர். ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, மழைக்காலங்களில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள், சளி,இருமல் உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.