தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தில் ரத்ததான தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜபாளையம் பகிர்வு அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார்.
லயன் எம்எஸ். ரவிராஜா.நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை. சமூக ஆர்வலர் கருப்பசாமி. உள்ளிட்ட ராஜபாளையத்தை சேர்ந்த 38 அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டமானது அதிக ரத்ததான முகாம்களை நடத்திய மாவட்டமாகவும், மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு ரத்ததான வங்கிகளில் ரத்த தட்டுப்பாடே இல்லாத அளவிற்கு ரத்ததானம் வழங்கிய மாவட்டமாக திகழ்வதாகவும், இதற்கு உதவியாக இருந்த அனைத்து ரத்ததான அமைப்புகளுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.