தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாரதிமோகன் தனது இணையதள நண்பர்களின் உதவியுடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற 2000 நபர்களுக்கு புத்தாடை வழங்கும் நெகிழ்ச்சி சம்பவம்.பொதுமக்கள் பாராட்டு.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இளைஞர் பாரதிமோகன் இப்பகுதியில் உள்ள ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களின் நிலை குறித்து அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சமூக ஆர்வலராக தன்னை மாற்றிக் கொண்டார்.
வெளிநாட்டு வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பிய பாரதிமோகன் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி டெல்டா மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையம், மற்றும் ஆதரவற்றுத் திக்கட்டு சாலையில் திரியும் நபர்களை கண்டறிந்து உணவு வழங்கும் பணியை துவங்கினார். இவரது சேவையை உணர்ந்த நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆதரவோடு கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.
குறிப்பாக ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதுடன் மனநலம் குன்றி சாலையில் சுற்றித்திரிவோர்களுக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடைகள் அணிவித்து அவர்களின் நிலையை மாற்றி வருகிறார். இவரது சமூக சேவையின் ஒரு படியாக ஆதரவற்று ஏழ்மை நிலையில் வாழும் முதியோர்களுக்கு சமூக வலைதள நண்பர்களின் உதவியுடன் வீடுகளும் கட்டி வழங்கி வருகிறார்
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் வசிக்கக்கூடிய ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் தனது இணையதள நண்பர்கள்,சமூக ஆர்வர்கள்,மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டியுள்ளார்.
இதன் மூலம் வேட்டி, சட்டை, புடவை,கைலி,துண்டு ,போர்வை என ஆயிரக்கணக்கான புத்தாடைகளை வாங்கி சேமித்துள்ளார். அதனை மயிலாடுதுறை,நாகை திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலையோரம் வசிக்க கூடிய ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்கு நேரில் சென்று வழங்கும் பணியை இன்று துவங்கினார்.
போர்வை வேஷ்டி , புடவை மற்றும் உணவு உள்ளிட்டவற்றை நேரடியாக சென்று சமூக சேவகர் பாரதி மோகன் வழங்கிய நிலையில் மாவட்டத்தில் டெல்டா மாவட்டம் முழுவதும் 2000 பேருக்கு புத்தாடைகள் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் தனது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் இணைதள நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்த இளைஞர் பாரதி மோகனின் முயற்ச்சியை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.