தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சாலையில் தமிழகம் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள சி பி ஏ என்ற ஏல விவசாயிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாணவ மாணவியர்களுக்கு தனியார் துறை வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினர்
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் கல்லூரியின் உப தலைவர் எஸ் ராமநாதன் கல்லூரி செயலாளர் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் உத்தரவின் பேரில் பள்ளி முதல்வர் என். சிவக்குமார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்