திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், சத்திரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம், நிலக்கோட்டை, நத்தம், பழனி, வேடசந்துார் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள், வேடசந்துார் புகையிலை ஆராய்ச்சி மையம், கொடைக்கானலில் அப்சர்வேட்டரி மற்றும் போட்கிளப் ஆகிய இடங்களில் மழைமானி நிலையங்கள் உள்ளன.
திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 5, திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 5, நத்தம் வட்டத்தில் 6, நிலக்கோட்டை வட்டத்தில் 4, ஆத்துார் வட்டத்தில் 4, பழனி வட்டத்தில் 8, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 9, வேடசந்துார் வட்டத்தில் 4, குஜிலியம்பாறை வட்டத்தில் 3, கொடைக்கானல் வட்டத்தில் 4 மற்றும் நத்தம் அழகர்மலை, பாலாறுபொருந்தலாறு அணை, கொடைக்கானல் பேரிஜம் ஏரி ஆகிய இடங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 57 இடங்களில் புதியதாக தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆத்துார், திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, நத்தம், ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்துார் ஆகிய 6 இடங்களில் சென்சார் பொருத்தப்பட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.