ராஜபாளையம் சக்க ராஜா கோட்டை நூலகத்தில் வாசகர் வட்ட விழா!
….ராஜபாளையம் சக்க ராஜா கோட்டை தெருவில் அமைந்துள்ள நகராட்சி பெண்கள் விடுதியில்அமைந்துள்ள சிறுவர் சிறுமியர் நூலகத்தில் வைத்து அக்னி சிறகுகள் அமைப்பும் அவ்வை தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய பாரதி வாசகர் வட்ட விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது …
அனைவரையும் சக்தி மகேஸ்வரி அவர்கள் வரவேற்றார்கள் . நிலவழகன் ஆசிரியர் தலைமை வகித்துதமிழில் சிறப்புகள் பற்றி எடுத்துக் கூறினார்கள். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் .கோ. பூமிநாதன் சேக்கிழார் மன்ற தலைவர் அவர்கள் கலந்து கொண்டு மனம் பற்றிய விளக்க உரை வழங்கினார்கள்…
மதுமிதா மற்றும் மாடசாமி ஆசிரியர் அக்டோபர் மாதம் அவதரித்த ராமலிங்க அடிகளாரை பற்றி விளக்க உரையாற்றினார்கள்பத்மாவதி ஆசிரியர்கவிதை வாசித்தார்கள். சேத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பொன்ராஜ் அவர்களுக்கு இன்று படைவீரர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழாவும் நடைபெற்றது பொன்ராஜ் அவர்களின் சமூக சேவைகளையும் ஏராளமான மரம் நட்டு பாதுகாத்து வருவதையும் 23 முறை ரத்த தானம் கொடுத்ததையும் பாராட்டி அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் நூலகர் முத்துலட்சுமி அவர்கள் வந்திருந்த மாணவர்களை கதை கூறச் சொல்லி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார்கள்.
ஔவை தமிழ் மன்றம் நிறுவனர் தமிழ் பித்தன் அவர்கள்திரு கோ. பூமிநாதன் அவர்கள் எழுதிய …விட்டு விடுதலையாகிவிடுநூலின் விமர்சனத்தை அருமையாக விளக்கினார்கள். விழாவில்மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.