மதுரையில் பெய்த தொடர் மழை-செல்லூர் ராஜ்
எம்.எல். ஏ. நேரில் ஆய்வு…
மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக, மேற்கு தொகுதிக் குட்பட்ட கரிசல்குளம் பாண்டியன் நகர், திருமால்நகர், அடமந்தை பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. சாலையில் தண்ணீர் வெள்ளம் போன்று ஓடியதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
இத்தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. மழைநீரில் நடந்து சென்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளை அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை விரைவாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
அருகில் மேற்கு 6-ம்பகுதி அ.தி.மு.க. செயலாளர் விளாங்குடி கே.ஆர்.சித்தன், டாக்டர் வி.பி.ஆர்.செல்வகுமார், நீதிகாந்த், மலர்விழி, வட்ட செயலாளர்கள் நாராயணன் விஜயகுமார், மற்றும் உமாசங்கர், கருப்பையா, வணங்காமுடி ஆகியோர் உடன் இருந்தனர்.