அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி அவர்களின் ஆலோசனையின் படி வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் ஜெசிந்தா, ஆஷா, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், டாக்டர் கோகுல்கோவிந்தராஜ், அலங்காநல்லூர் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் ரேகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் செந்தில்வேல் குமரன் வரவேற்றார்.

இதில் 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் பரதம், நாட்டுப்புற நடனம், கும்மி, கரகம், மணல் சிற்பம், பலகுரல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த வட்டார அளவில் நடைபெறும் அனைத்து போட்டிகளில் முதலிடம் பெரும் மாணவர்கள் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கலை திருவிழா நிகழ்ச்சிகளை கலைகளில் சிறப்பு பெற்ற வல்லுனர்கள் கலை நடுவர்களாக கலந்து கொண்டு தேர்வு செய்தனர்.

அலங்காநல்லூர் வட்டார ஆசிரியர் பயிற்றுனர்கள், நிர்வாக பயிற்றுவிப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தனர். கலை திருவிழா போட்டிகளில் மாநில அளவில் அதிக போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெரும் மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் அவர்களால் கலை அரசன், கலை அரசி விருது வழங்குவதுடன் மாவட்ட அளவில் முதலிடம் பெரும் மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவகாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *