அலங்காநல்லூரில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கம் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பாக தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழ்நாடு கூட்டுறவு அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அனைத்து பணியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர், ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரத்தினம் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் விற்பனையாளர் இருப்பு குறைவு இரு மடங்கு அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் விற்பனையாளர் அச்சுறுத்தலை நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்கள் 100 சதவீதம் வழங்குவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிதாக பணியமர்த்தப்பட்ட விற்பனையாளர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பணியாளர்களை அவரவர் இருப்பிடத்திலிருந்து அருகில் உள்ள நியாய விலை கடைகளில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் விரைவில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 75க்கும் மேற்பட்ட கூட்டுறவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.