காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவு விளையாட்டு போட்டி
-காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் வழிகாட்டுதலின்படி, கீழப்பழூர் காவல் நிலையத்தின் சார்பாக, கீழப்பழூர் சுவாமி ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் 23.10.2024 இன்று காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த 8 அணியினர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கீழகுடியிருப்பு அணியினர் முதல் பரிசையும், பொய்யூர் அணியினர் இரண்டாம் பரிசையும், சுவாமி ஸ்கூல் கீழப்பழுவூர் அணியினர் மூன்றாம் பரிசையும், அரியலூர் அணியினர் நான்காவது பரிசையும் வென்றனர்.
மேலும் வெற்றி பெற்ற அணியினருக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்கள்.கீழப்பழூர் காவல் ஆய்வாளர் .இராஜீவ் காந்தி ,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.