கம்பம் தடம் அறக்கட்டளை சார்பில் தடம் விருதுகள் வழங்கும் விழா தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல்பட்டு வரும் தடம் அறக்கட்டளை நிறுவனம் கல்வி மருத்துவம் இலக்கியம் போன்ற துறைகளில் சாதனைகள் புரியும் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு விழாவில் கேடயம் என்ற பரிசுகள் வழங்குவது வழக்கம் இதன்படி கம்பம் காமய கவுண்டன்பட்டி ரோட்டில் அமைந்துள்ள கோகுலம் யாதவர் மீட்டிங் ஹாலில் தடம் அறக்கட்டளை தடம் விருதுகள் வழங்கும் விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் கம்பம் நகரின் தலை சிறந்த டாக்டர் செல்வம் தலைமை தாங்கினார் தடம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தலைமையாசிரியர் பி. சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
தடம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும் இன்பா ஹோமியோபதி சிறப்பு டாக்டர் ஆர். இன்பசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கேரள மாநில மொழிச் சிறுபான்மை குழு உறுப்பினர் ஓய். செல்வம் மூத்த வழக்கறிஞர் டி. கணேசன் மதுரை கலிலியோ அறிவியல் மையம் சத்யமாணிக்கம் ஆசிரியர் கு ராஜசேகரன் ஆகியோர் ர் வாழ்த்துரை வழங்கினார்கள் டாட்டா நிறுவன அதிபரும் எத்தனையோ ஏழை எளிய குடும்பத்திற்குஒளி ஏற்றிய தொழில் அதிபர் ரத்தன் டாட்டாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. எழுத்தாளர் தேனி சுந்தர் நல்லாசிரியர் விருது பெற்ற க. சாந்தி. விளையாட்டு சாதனையாளர் கூடலூர் என்.எஸ்.கே.பி விளையாட்டு சாதனையாளர் இன்பத் தமிழன் ஆகியோரின் சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் பாராட்டி உரையாற்றி அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.தடம் விருதுகள் பற்றியும் அதன் நோக்கம் குறித்தும் பூமணம் ராஜா விளக்கி பேசினார்.
தடம் நூல் வெளியீட்டு களம் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.தடம் அறக்கட்டளை காமராஜர் கல்வி விருது எஸ்.யூ.எம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ். கோவிந்தராஜ்க்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது கம்பம் நகர மக்களின் நன்மதிப்பைப் பெற்ற டாக்டர் ஆர் .மோகனசுந்தரம் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தடம் ஒளவையார் இலக்கிய விருது பன்முகக் கலைஞர் சித்தேந்திரனுக்கும் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியின் தமிழ் பேராசிரியை இரா. தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தடம் ராஜரத்தினம் விளையாட்டு விருது ராயப்பன்பட்டி ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை செல்வி தீபிகாவுக்கும் தடம் பல்துறை சிறப்பு விருது டாக்டர் பூர்ணிமா கணநாதன் ஆசிரியர் அமிழ்தினி தனசேகரன் வழங்கப்பட்டது
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தடம் நிறுவன உறுப்பினர்கள் ஆசிரியர் பூமணம் ராஜா ஹோமியோபதி டாக்டர் இரா.இன்ப சேகரன் டாக்டர்கள் க. செல்வம் பூர்ணிமா ஆசிரியர் கு. ராஜசேகரன் தலைமை ஆசிரியர்கள் பி சிவக்குமார் பி. ராஜேந்திரன் ஆசிரியர்கள் சரவணன் கு. நிருபன் குமார் நிர்வாகிகள் பட்டர் நாராயணன் என்ற பாலாஜி ஏ. சதீஷ் மற்றும் நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்து விலகு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கனிவுடன் உபசரித்தனர். தடம் அறக்கட்டளை நிர்வாகி ஆசிரியர் சரவணன் நன்றி உரையாற்றினார்.