விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கொடுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விருத்தாசலம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாய் அல்லது தந்தை இல்லாத மாணவ மாணவியர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் நோட்டு ஆகியவை வழங்கும் விழா இன்று ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் ஹை ஸ்டைல் உரிமையாளரும் ரோட்டரி சங்க உறுப்பினருமான ரவிச்சந்திரன் மற்றும் பேன்சி சில்க் ஹவுஸ் உரிமையாளரும் ரோட்டரி சங்க உறுப்பினருமான ராஜி ஆகியோர் இணைந்து மாணவ மாணவிகளுக்கு புதிய ஆடைகள் அன்பளிப்பாக வழங்கினார்கள். இதனை ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். இந்த விழாவில் ரோட்டரி சங்க 61-வது சேவை திட்டத்தின் தலைவர் அன்புக்குமரன், ரோட்டரி சங்க நிர்வாகி ரமேஷ் சந்த், CSC.பிரகாஷ் ராஜா,பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். நிகழ்ச்சி முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் பரமசிவம் நன்றி கூறினார்.