வலங்கைமான் அருகே உள்ள தென் குவளை வேலி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென் குவளை வேலி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, திருவாரூர் மாவட்ட சுகாதார அலுவலர் வழிகாட்டுதல் படி, ஆலங்குடி மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இம் முகாமில் ஆலங்குடி மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில் பொது மருத்துவம் மற்றும் பெண்களுக்கான மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம், கண் மருத்துவம்,சித்த மருத்துவம், பல் மருத்துவம்,ஆய்வக பரிசோதனைகள் மற்றும் நம்பிக்கை மையம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இயன் முறை மருத்துவம்,இசிஜி மற்றும் வயாவெளி மற்றும் சிறப்பு நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
காச நோய் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டது. முகாமில் தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. வலங்கைமான் வட்டார அளவில் உள்ள அனைத்து மருத்துவ அலுவலர்களும், செவிலியர்களும், சுகாதார மேற்பார்வை யாளர்களும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள்,ஆய்வக நுட்புணர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சுரேந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.