எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகர எலத்தூர் புது தெருவை சேர்ந்த ராஜ்மோகன் என்பவருக்கு சொந்தமான வயலில் நடவு பணி நடைபெற்றுள்ளது.அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது அப்போது வயலில் நடவு நட்டு கொண்டிருந்த குறிச்சி ரோட்டு தெருவை சேர்ந்த மோகன் மனைவி சாந்தி.55. என்பவரை மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
இது குறித்து விஏஓ காவிய பிரியா கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்த சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.