தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2, நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்
சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்டா பொறியாளர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சாலை பணியாளர்களை
இழிவுபடுத்தும் தாராபுரம் உதவிக்கோட்ட பொறியாளர்,கணேசமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு சட்டப்படி சாலை ஆய்வாளர் நிலை பதவி உயர்வும். அலுவலக உதவியாளர். இரவுக்காவலர் பணிமாற்றம் வழங்கவேண்டும்.
சாலைப்பணியாளர்கள் சாலைபராமரிப்பு பணி மேற்கொள்வதற்குரிய கருவித்தளவாடங்கள் மற்றும் காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும்.
சாலைப்பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவக்காப்பீடு அட்டையை பெற்று தந்திடவேண்டும்.
பொது சேமநலநிதி முன்பணம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மாதக்கணக்கில் காலங்கடத்துவதை தவிர்த்து பதினைந்து தினங்களுக்குள் பெற்று தந்திட வேண்டும்.
சாலைப்பணியாளர்களை சொந்த பணிகளுக்கும் மாற்று பணிகளுக்கும் பயன்படுத்துவதை தவிர்த்து.சாலைபராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
கோட்டத் தலைவர் வெங்கிடுசாமி தலைமையில் கடந்த திங்கட்கிழமை காலை 10:00 மணியில் இருந்து புதன்கிழமை வரை 2 நாட்களாக இரவு பகலாக சாப்பாடு சமைத்து சாப்பிட்டு கோட்டப்பணியாளர் அலுவலகத்திலேயே படுத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20