திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் (21/10 /2024) ஒன்றிய சேர்மன் ஹேமலதா முத்துச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.இதில் துணைத் தலைவர் கலைச்செல்வி சிலையழகன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துமாரி, குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
இக்கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. கூட்டத்தில் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் ஒன்றிய வரவு செலவு குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் மேலும் நிறைவேற்றப்படாத மக்கள் பணிகளை கூட்டத்தில் முன் வைத்தனர்.ஒன்றிய பெருந்தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன் பேசுகையில், மக்கள் பணிகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை உடனடியாக ஆய்வு செய்து பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா, திட்ட மேலாளர் சுரேந்தர், ஒன்றிய பொறியாளர்கள் பாலமுருகன், பாலாஜி,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முத்து ரமேஷ், வெங்கடசுப்பிரமணியன், ஜெயக்குமார், காசாளர் தங்கராஜ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அத்தியப்பன், முத்துக்குமார், பாக்கீஸ், ராமச்சந்திரன், ராஜசேகரன் ,தனலட்சுமி,ஜெகநாதன், ம.சந்திரா, மணிகண்டன், லலிதா, கண்ணதாசன், ரேணுகாதேவி, மு.சந்திரா உள்ளிட்ட கவுன்சலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சேர்மன் தெரிவித்தார்.இறுதியில் துணைத் தலைவர் கலைச்செல்வி சிலையழகன் நன்றி தெரிவித்தார்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்