ராஜபாளையம் ஏ.கே. டி. தர்மராஜா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் 146 வது பிறந்தநாள் விழா!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுதந்திர காலத்திற்கு முன்பே ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு பகுதியில் ஆரம்பக் கல்வியை நிலைநாட்டி இப்பகுதி கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் அடித்தளமிட்ட ஸ்ரீ ராவ்பகதூர் ஏ.கே.டி. தர்மராஜா 146 வது பிறந்த தின விழா ராஜபாளையத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலையில் ஏ.கே.டி. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து பள்ளி மாணவ மாணவியரின் ஊர்வலம் துவங்கியது. ஏ.கே.டி.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சக்கனியம்மாள் ஆங்கில வழி கல்வி பள்ளி, ஏ.கே.டி. தர்மராஜா ஆரம்பப் பள்ளி, ஏகேடி தர்மராஜா பெண்கள் நடுநிலைப்பள்ளி, மாணவ மாணவியர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
பள்ளிகளின் தாளாளர் ஏ கே டி கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் ஸ்தாபகர் இல்லம் வந்து அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பழையபாளையம் சத்திரிய ராஜூக்கள் சமூக சாவடி முன்புள்ள திடலில் அமைந்துள்ள ஏ.கே.டி. தர்மராஜா முழு திருவுருவச் சிலைக்கு கல்வி குழும தாளாளர் கிருஷணமராஜு .பளையபாளையம் மகாசபை தலைவர் பிரகாஷ் மற்றும் கல்வி குழும நிர்வாகிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரி, ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்வியல் கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் சமூக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியாக
மாணவ மாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது