எரியோடு அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு துறை சார்பாக வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி
திண்டுக்கல், வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி மற்றும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.