கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம் ஆவலபள்ளியில் உள்ள கெலவரபள்ளி அணையில் வரும் நீரில் அதிகமாக ரசாயன கழிவு கலந்து நுரை மலைபோல் குவிந்து நீர்வருவதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாலும் ரசாயன கழிவுநீரால் கால்நடைகள், விவசாய நிலங்கள்,அங்கே வாழும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி நீரை பயன்படுத்தும் மக்களுக்குபுற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டத்தை முன்னெடுத்து அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில மகளீர் அணி செயலாளர் க.முத்துலட்சுமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார் இதில் மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி சிறப்புரை ஆற்றினார், மாவட்ட பொருளாளர் திரு.முனிராஜ் அவர்கள் நன்றி உரை கூறினார்
இளைஞர் அணி தலைவர் திரு.விஸ்வநாத் திரு.முனிரெட்டி மூர்த்தி மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
அரசு உடனே இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாக மாநில மகளீர் அணி செயலாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள் தெரிவித்தார்.