புதிய தாழ்தள பேருந்துகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக 9 புதிய தாழ்தள பேருந்துகளை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக 9 புதிய தாழ்தள பேருந்துகளை கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (மதுரை மண்டலம்) மேலாண்மை இயக்குநர் சிங்காரவேலு , மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.