கோவை அவிநாசி சாலை கோல்ட்வின்ஸ் பகுதியில் அமைந்துள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் ரெஸ்ட்டோ பார் அதன் உட்கட்டமைப்புகளை புதுப்பித்து கடந்த சனிக்கிழமை அன்று மீண்டும் தனது சேவைகளை துவக்கியது.
இந்த வளாகத்தை பிரபல திரை நட்சத்திரம் சாக்க்ஷி அகர்வால் அதன் திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த ரெஸ்ட்டோ பாரின் பிரான்சைஸ் உரிமையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் பிரியா வெங்கடேஷ் முன்னிலையில் திறந்து வைத்தார்.
புதுவகை அம்சங்களாக இந்த ரெஸ்ட்டோ பாரின் உள்புறம் பிரிட்டன் நாட்டில் உள்ள ரெஸ்ட்டோ பாரில் இருக்கும் உள்புற அமைப்புகள் போல அமைக்கப்பட்டுள்ளன. லண்டன் ரயில்வே கடிகாரம், இங்கிலாந்து நாட்டு பிரபல பாடகர்களின் படங்கள், வாசகங்கள் போன்ற பல அலங்காரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்னூக்கர்ஸ் விளையாட்டு மேஜையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெஸ்டோ பார் என்பது வெறும் பானங்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை எடுத்து சொல்லும் வகையில் இங்கு உணவுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்தியன், சைனீஸ், காண்டினெண்டல் வகை உணவுகள் மட்டுமல்லாது, அரிசி பருப்பு சாதம், அங்கன்னன் பிரியாணி போன்ற பிரியாணி வகைகள், கரூர் பகுதியில் பிரபலமான கரம்/ தட்டு வடை செட்டு, காயின் பரோட்டா போன்ற உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
தீபாவளி வரை முன்பதிவு செய்து இந்த வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு 30% தள்ளுபடி உண்டு. காலை 11 மணி முதல் இரவு 12 மணி வரை இந்த ரெஸ்டோ பார் இயங்கும். சுமார் 40 வாகனங்களை நிறுத்தும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா கணகணிபுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இங்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து தாங்களாகவே வாகனத்தை இயக்க முடியாத வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு கொண்டு சேர்க்க ஆக்டிங் டிரைவர்கள் 6 பேர் உள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக அவர்களை நியமிக்கவும் தாங்கள் தயார் என இந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.