விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் தேவர் மகா சபை சார்பாக 117வது தேவர் ஜெயந்தி விழா 62வது குருபூஜை விழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் தலைவர் என்.எஸ். ராமராஜ் துவக்கி வைத்தார். தேசியத் தலைவர் பசும்பொன் ஐயா திருவுருவ சிலைக்கு வணங்கி மாலை அணிவித்து விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.