மதுரையில் ஒளி 2024 என்ற நல்லிணக்க தலைப்பின் கீழ் ஆதரவற்ற 120 க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கான தீபாவளி கொண்டாட்டத்தை ஜி.என்.இ. குழுமம் ஆகியோரும் இணைந்து மதுரை கே கே நகர், கிருஷ்ண ஐயங்கார் மஹாலில் நடத்தினர். இந்த விழாவிற்கு மரியாதைக்குரிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தி ஆனைமலைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரகுராம், மேலாண்மை இயக்குநர் சுகன்யா ரகுராம் மற்றும் நிறுவனர் ராஜா, ஒளி அழைப்பாளர் விஷ்வநாத் மற்றும் தி ஆனைமலைஸ் குழுமம் ராம்குமார், ஆனைமலைஸ் ஏஜென்ஸிஸ் மதுரை பி.லிமிடெட் சேதுராஜன் ஆகிரயோர் வருகை தந்து நடத்தி வைத்தனர்.
இந்த 120 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவியும், தாழ்வு மனப்பான்மையை போக்கும் வகையில் முன்னேறுவத
ற்கான ஆலோசனைகளும், தொழில் துவங்குவதற்கு உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. சிறையில் வாடும் தண்டனை பெற்றவர்கள்
குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆனைமலைஸ் ஏஜென்ஸிஸ் மதுரை பி.லிமிடெட் கார்த்திகேயன், முதுநிலை மேலாளர் சண்முகம், வினோத்குமார், துணை மேலாளர் மயில் செய்திருந்தனர்.
