விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மன்ற சாதாரண கூட்டம் பி.எஸ். குமாரசாமி ராஜா கூட்ட அரங்கில் வைத்து தலைவர் ஏ. ஏ. எஸ். பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் நாகராஜன், நகராட்சி உதவி செயற்பொறியாளர் முகமது ஷெரிப் மற்றும் அலுவலர்கள், 42 வார்டுகளைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த செயல்படுத்தவும், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தை விரைவாக செயல்படுத்தி கடைகளை வாடகைக்கு விடுவதற்கு உரிய வழிமுறைகள் செய்யவும், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் கீழ்புறம் உள்ள மீன் கடைகளை உழவர் சந்தைக்கு அருகே கொண்டு செல்லவும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நகர்மன்ற தலைவரால் கொண்டுவரப்பட்டது.
மொத்தம் 147 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர் கணேஷ், சோலைமலை, ஜான் கென்னடி, ராதா, ஞானவேல் ராதாமாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
குடிநீர், கழிவு நீர் வாறுகால் தூர்வாறுதல் மற்றும் சாலை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை துரிதப்படுத்தவும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்டுள் சாலைகளை உடனடியாக சரி செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.
உரிய நிதி வரப்பெற்ற உடன் விரைவாக செய்து முடிக்க நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உறுதி அளித்தார்.