கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ்.இவர் அதே ஊரில் அரசு பள்ளியில் பயின்று தற்போது தாளியூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலராக இருக்கிறார்.தனது சிறு வயதில் மிகவும் கஷ்டபட்ட இவர் ஜெயா அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பை தொடங்கி பல்வேறு சமூக சேவை பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் கவுன்சிலர் பொன்ராஜ் தீபாவளியை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவது வழக்கம்.இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள 1500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் கவுன்சிலர் பொன்ராஜ் பட்டாசு கிப்ட்பாக்ஸ்,புத்தாடைகள் கொடுத்து அசத்தினார். இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கவுன்சிலர் பொன்ராஜ் கூறுகையில் தான் அரசு பள்ளியில் பயிலும் போது உடுத்துவதற்கு சரியான உடை என்பது இல்லை.அப்போது உதவி செய்வதற்கும் யாரும் இல்லை.அதே போல தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு வசதி இல்லை.இம்மாதிரியான கஷ்டத்தை தற்போது உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அனுபவிக்க கூடாது என்பதற்காக தான் அறக்கட்டளையை துவங்கி சேவைகளை செய்து வருவதாக தெரிவித்தார்.