தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், தமிழ்நாடு காவேரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில நீர்வாக குழுக் கூட்டம் மாநில தலைவர் எல்.பழனியப்பன் முன்னிலையில், நிர்வாக குழு தலைவர் சேரன்குளம் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் மாநிலத் துணைத் தலைவர் எ.தேவராஜன், மாவட்ட செயலாளர் எம்.மணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஸ்வலிங்கம், மாநகரத் தலைவர் பி.காமராஜ், மாநகர செயலாளர் பி.அறிவு உள்ளிட்ட நீர்வாகக் குழு உறுப்பிர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் நமது சங்க அமைப்பை வலுப்படுத்துவது, காவிரி ஆற்றில் ராசி மணலில் அணைக் கட்டுவது குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதாக. நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கும் 3500, கரும்புக்கு 5000 எனவும், பயறு வகைகளுக்கு குவிண்டாலுக்கு 10000 தமிழக அரசு வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பாதிப்பு ஏற்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.