வால்பாறையில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் கற்பிணி பெண்களுக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் கண்,காது முதல் மகளீர் நலம்,மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்ளிட்ட சுமார் 15 க்கும் மேற்பட்டவைகளுக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சிறப்பு பரிசோதனைகள் பல்வேறு மருத்துவமனைகளின் சார்பாக நடைபெற்றது

சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் முன்னிலை வகித்த நிலையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார்,ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை மருத்துவர் பாரதி கண்ணன், மருத்துவர் பாபு லட்சுமணன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்தியா, அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் மகேஷ் ஆனந்தி மற்றும் மருத்துவர்களும், நகர் மன்ற உறுப்பினர்களும், பணியாளர்களும் சிறப்பாக பணி செய்து சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *