மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் மதுரை குயவர் பாளையம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யாஸ்மின், 19 வயதுக்குட்பட்ட நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். மேலும் இம்மாணவி 100 மற்றும் 200 மீட்டர் தடகள ஓட்ட போட்டியிலும் இரண்டாம் இடமும் பெற்றார்.
மேலும் இம்மாணவி உட்பட குழுவினர் பங்கு பெற்ற 4×100 தொடர் ஓட்ட குழு போட்டியிலும் இப்பள்ளி முதல் இடம் பிடித்துள்ளது.
மேற்கண்ட நான்கு போட்டிகளிலும் தகுதி பெற்று மாநில அளவில் ஈரோட்டில் நடைபெறும் போட்டியில் மாணவி யாஸ்மின் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார்
வெற்றி பெற்ற மாணவி யாஸ்மினை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயராணி, உடற்கல்வி ஆசிரியர்கள் அருள் சர்மிளா, ஷர்மிளா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.