மது போதையில் அதிவேகமாக கார் ஒட்டி வந்த தொழிலதிபர் மகன் டூவீலர் கார் காவல்துறை என பலபேர் மீது மோதி விட்டு நிற்காமல் அரசு பேருந்து மீது மோதி விபத்து நான்கு பேர் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் திரௌபதிஅம்மன் கோவில் அருகே தேவிபட்டினத்தில் இருந்து இராஜபாளையம் வந்த அரசு பேருந்து மீது மோதி கார் விபத்துக்குள்ளானது இந்த காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர்
பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் பொன்னையா கூறும் பொழுது கார் அதிவேகமாக வந்ததாகவும் காரில் வந்த நான்கு பேரும் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தார் .
இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு தலைமையில் வந்த போலீசார் காயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது போலீசார் விசாரணை செய்த பொழுது இராஜபாளையம் தனியார் நூர்பாலை தொழில் அதிபர் ராஜேந்திரன் மகன்
தங்கராஜா காரை ஒட்டியதாகவும் இவருடன் தனியார் வங்கியில் பணிபுரியக்கூடிய பொன்னுறங்க மூப்பனார் தெருவை சேர்ந்த கலசலிங்கம் மகன் கார்த்திக் ராஜா .மற்றும் அவரது நண்பரான கட்டையன் தெருவை சேர்ந்த ராமராஜன் மகன் ராஜகுரு மற்றொரு நண்பர் முகில்வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் காளீஸ்வரன் ஆகிய நான்கு பேரும் தனியார் பாரில் மது அருந்திவிட்டு வரும்பொழுது போதை தலைக்கேறி நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதி விட்டும் எதிரே வந்த சில கார்கள். மற்றும் தடுப்பு பலகை என மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றதை அன்னப்பராஜா ஸ்கூல் செக் போஸ்ட் பகுதியில் ரோந்து பணியிலிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வள்ளியம்மாள்
காரை பின் தொடர்ந்துள்ளார் இந்நிலையில் எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்