கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் ஒன்றான நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவம் விழா தொடக்கம்….
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத கந்த சஷ்டி உற்சவர் விழாவை முன்னிட்டு சந்திரசேகர் அம்பாள் வள்ளி தெய்வானை சண்முகர் சமமேதராக வீரகேசரி வீரபாகுடன் சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபம் காண்பிக்கப்பட்டு மலை கோவில் இருந்து அடி இறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுவாமிமலை கோவில் அறநிலைத்துறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.